Tuesday, December 6, 2011

சூரியனை விட மிகப்பெரிய 18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!


சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில், நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இதுவாகும் என்றார்.

18 கிரகங்களை கெப்ளர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது என்றார்.

Sunday, December 4, 2011

300வருடங்கள் பழமை வாய்ந்த உல்லாச விடுதி மக்களின் பார்வைக்கு

300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர்.
இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும் 1.2மீற்றர் அகலமும் கொண்டது. 

கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும் நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு பிலாஸ்டிக் பொருட்களாலும் பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுல்லாச மாளிகையின் சூழலில் அமைந்துள்ள சுவர்கள் உரோம அரசர்களின் சின்னங்களாலும் பல கடவுகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Saturday, December 3, 2011

உயிருடன் புதைக்கப்பட்டு 'மரண பாடம்' கற்கும் மருத்துவ மாணவர்கள்..

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர்.

'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.


இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும். பின்னர் பிரேதங்களுக்கான உடைகள் அணிந்தவாறு சவப்பெட்டிக்குள் படுத்துக்கொள்ள வேண்டும்.

இம்மாணவர்கள் சவப்பெட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் மீட்கப்படுவர்.

பேராசிரியர் கியு டேடெங் இது தொடர்பாக கூறுகையில் 'இது வெறும் 10 நிமிட பாடம்தான் என்றாலும் உண்மையான மரணத்திற்கு சமமான அனுபவம் இது' என விபரித்துள்ளார்.

இதில் பங்குபற்றிய மாணவர் ஸியாவோ லின் தெரிவிக்கையில் 'நான் சவப்பெட்டியில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் பிறந்து வந்ததாகவே உணர்ந்தேன். இப்போது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளினதும் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.