வின்சென்ட் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Goh, 30 மார்ச் 1853 - 29 ஜூலை 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத (Post-Impressionist) ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே.
Thursday, October 20, 2011
மோனாலிசா ஓவியத்தில் சிரிப்பது, பெண் அல்ல..!
![]() |
| monalisha |
லண்டன்: உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால் இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.
மோனாலிசா ஓவியத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்றும், அந்தப் புன்னகை பற்றியும் ஏராளமான கருத்துகள் நிலவி வருகின்றன. யாராலும் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியாத அந்த ஓவியத்தைப் பற்றி இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடியும் ஆய்வு மேற்கொண்டார்.
மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)
![]() |
| mickas ansale |
கலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல் யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர் களது தனித்துவமான ஆற்றல்களும் கலை நுட்பங்களுமே காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஐரோப்பியக் கலைஞர்கள் கலைத்திறன் மிக்கவர்களாகவும் கலையுணர்வு மிகைத்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வகை கலைஞர்களின் ஒருவரான மறுமலர்ச்சிக்கால ஓவியர் மைக்கலாஞ்சலோ குறிப்பிடத்தக்க வராவார். புகழ் பெற்ற ஓவியர்களின் வாழ்க் கையை ஆராய்ந்தால், அவர் களது தந்தை, தாய், சகோதரர் என யாராவது ஒருவர் கலை துறையில் ஈடுபாடு கொண்ட வர்களாகவோ அல்லது ஊக்கமளிக்கின்றவர்களாகவோ காணப்படுவர். ஆனால், கலைத் துறையில் ஈடுபாடில்லாத கலைத்துறையில் வெறுப்புக் கொண்ட ஒரு தந்தைக்கே இவர் மகனாகப் பிறந்தார். 1475 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் நகரில் காசல் கப்aல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை கலைஞனாகக் கூடாதென தடை விதித்த போதும் சிறு வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
Subscribe to:
Comments (Atom)





